Thursday, December 29, 2011

கர்த்தரின் வருகைக்காய் விழித்திருங்கள்

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

14. அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, 
உடனே பிரயாணப்பட்டுப் போனான்.  மத்தேயு 25 : 14- 30
தேவன் இந்த உவமையை அவருடைய ஊழியக்காரர்களுக்கு சொல்லுகிறார். இதிலே தாலந்து என்று குறிப்பிடுவது விசுவாசிகளை (சபை ஜனங்களை).  இயேசுவானவர் தமது சொந்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்டார். அவருடைய ஆஸ்தி (சொத்து) சபை.

இது கிறிஸ்து தந்த ஊழியம். இதனை பெருமைக்காகவோ, அல்லது அவலட்சணமான ஆதாயத்திற்காகவோ செய்யாமலும் கிறிஸ்துவின் வருகைக்கிடையில் - இயன்றவரை சுவிசேஷத்தை அறிவித்துவிட வேண்டும்.
தேவன் எப்படி தமது சீடர்களுக்கு கற்பித்து, வழிகாட்டி அவர்களை ஊழியத்திலே பயிற்றுவித்து, அவர்களை ஊழியத்துக்கு அனுப்பினாரோ, அதேபோல சபையிலும் செய்ய வேண்டும்.
அப்படி ஜனங்கள் அனுப்ப-பட்டால் மட்டும்தான் ஊழியம் வளரும்.


மற்றவர்கள் உங்களை காண வேண்டும், பாராட்ட வேண்டும், உங்களைப்பற்றி பெருமையாக பேச வேண்டும் என்று காரியங்கள் செய்யக்கூடாது!

மிக மிக முக்கியம். உன்னுடைய வாழ்நாள் முழுவதும் இப்படியொரு ஊhழியத்தையே செய்துவந்தால், அந்த ஊழியத்துக்கு பயன் இல்லை!
1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
மத்தேயு 6 : 1 - 7
தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:
    மத்தேயு 23 : 5- 7, மாற்கு 12 : 38 - 40
 


நீ எதை போதிக்கின்றாயோ, அதை நீயே செய்ய வேண்டும்.

இன்றைய சபைகளில் இதுதான் மிகப்பெரிய பிரச்சனை. போதிப்பவனுக்கும் வேதாகமத்துக்கும் சம்பந்தமே இருக்காது !
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
 மத்தேயு 23 : 2 - 3

 

 தாழ்மை இல்லையேல் ஊழியம் இல்லை!

ஊழியம் என்பது .. இதுதான் அதன் முதற்படி.
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான்13 : 14, 15

உன்னை நீயே சோதி: உண்மையுள்ளவனா ? முகதாட்சண்யம் பார்க்காதவனா?

பொய்யர் அனைவரும் நரகத்திலே தள்ளப்படுவர்.
அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லை (அக்கறையில்லை) என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். மாற்கு 12 : 14

No comments:

Post a Comment