Thursday, December 29, 2011

நத்தார் தினத்தில் நைஜீரிய தேவாலயங்கள் மீது தாக்குதல்


நைஜீரியாவின் பல நகரங்களில் உள்ள பல தேவாலயங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான போகோ ஹராம் அமைப்பு கூறியுள்ளது.
தலைநகர் அபுஜாவில் உள்ள றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நத்தார் தின வழிபாட்டாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
25 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மீட்புப் பணியாளர்கள் மீது, ஆத்திரமடைந்த கூட்டத்தினர் தாக்குவதை தடுப்பதற்காக சம்பவ இடத்துக்கு நைஜீரியப் படைகள் அனுப்பப்பட்டன.
மத்திய நகரான ஜொஸ்ஸில் நடந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.
மூன்றாவது குண்டுத் தாக்குதல் வடகிழக்கு நகரான டமத்துருவில் நடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுவான போகோ ஹரம் குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான அண்மைய மோதல்களை அடுத்து, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பூசைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment